டெல்லி: அண்மையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் மட்டும் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
நாட்டில் தொலைத்தொடர்பு சேவை சேவைகறைள ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இதில் ஜியோ தான் நாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியா ஏர்டெல் இருக்கிறது. இதற்கு அடுத்து வோடபோன் ஐடியா நிறுவனமும், பிஎஸ்என்எல் (பொதுத்துறை நிறுவனம்) ஆகியவை உள்ளன.

இந்நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஜூலை மற்றும் ஜூலை 4 முதல் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்த உள்ளன. இதனால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர்.
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை தாருமாறாக உயர்த்தியுள்ள நிலையில், பிஎஸ்என்எல் மட்டும் நாடு முழுவதும் தனது நம்பிக்கையான வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு சிக்கனமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ.249 திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளருக்கு எந்த அளவுக்கு சேமிப்பு தரும் திட்டம் என்பதை பற்றி பார்ப்போம்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களுக்கு கணிசமான கட்டண உயர்வை அறிவித்துள்ளன.
ஜியோ மற்றும் ஏர்டெல் கட்டண உயர்வு: ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
வோடபோன் ஐடியா: ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களுக்கு சுமார் ரூ.600 வரை அதிகமாகச் செலுத்த வேண்டியது வரும். இது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு கவலை தரும் விஷயமாக இருக்கிறது.
அதேநேரம் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ.249 திட்டம் உண்மையில் சூப்பரான திட்டமாகவும், கட்டண உயர்வால் கவலையில் உள்ள மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல்க்கு மாற்றவைக்கும் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ.249 திட்டம் முற்றிலும் புதிய திட்டம் ஆகும்.
இதன் வேலிடிட்டி 45 நாட்கள் நீடிக்கும்.
இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச அன்லிமிடெட் அழைப்பு.
மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபி பயன்படுத்தலாம்
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.
பிஎஸ்என்எல் vs ஏர்டெல் எது சிறந்த திட்டம்:
ஏர்டெல்லின் ரூ.249 திட்டம்:
28 நாட்கள் வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா.
BSNL இன் ரூ.249 திட்டம்:
45 நாட்களுக்கு வேலிடிட்டி
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா.
ஏர்டெல்லுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, புதிய பிஎஸ்என்எல் திட்டம் பயனருக்கு 17 நாட்கள் கூடுதல் சேவையை வழங்குவது மட்டுமல்லாமல், தினசரி டேட்டா 2ஜி என்கிற அளவில் இருக்கிறது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பிளான்களுக்கு கட்டணத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிஎஸ்என்எல் புதிதாக யுக்தியாக கட்டணத்தை குறைத்துள்ளது. இதன் மூலம் பலர் பிஎஸ்என்எல்க்கு மாற வாய்ப்பு உள்ளது.