குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ரேஷன் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் பெற இது உதவுகிறது. இதுவரை, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பக்க அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான எளிதான வசதியை வழங்கியுள்ளது.
ரேஷன் கார்டு என்பது மாநில அரசால் வழங்கப்படும் ஒருவகை ஆவணம். குறைந்த வருமானத்தை பெறக்கூடிய குடும்பங்கள் இதனைப் பயன்படுத்தி தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013 இன் கீழ் குறைந்த விலையில் உணவு தானியங்கள் மற்றும் ரேஷன் பொருட்களை வாங்கலாம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் ரேஷன் பொருட்களின் அளவு தீர்மானிக்கப்படுகிறது.

How to Apply Ration Card Online in Tamil Nadu?
சிலர் ரேஷன் கார்டுகளை மோசடியாகப் பயன்படுத்தி பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டில் இருப்பவருடைய ரேஷன் கார்டைப் பயன்படுத்துவது, இறந்தவருடைய பெயரில் இருக்கும் ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்துவது, பெயர் நீக்கம் செய்யப்படாமல் இன்னொரு ரேஷன் கார்டிலும் தங்கள் பெயரை இணைத்துக் கொள்வது என லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும். அந்த அளவு ரேஷன் கார்டு மோசடிகளும் அதிகரித்து விட்டன. இதனால் தற்போது ரேஷன் கார்டு ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பது நெறிப்படுத்தப்பட்டுள்ளது. கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றி நீங்கள் வீட்டிலிருந்தே ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதில் ‘smart card application services’ என்பதன் கீழ் இருக்கும் ‘apply new smart card’ என்பதை கிளிக் செய்வும். மேலும் நீங்கள் உங்களுக்கு விருப்பனமான மொழியை இணையதளத்தின் வலதுபுறத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
ஸ்டெப் 3: அதன் பிறகு,குடும்பத் தலைவரின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படமும், தற்போது குடியிருக்கும் முகவரியின் சான்றை அந்த இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
ஸ்டெப் 4: நீங்கள் அந்த படிவம் முழுவதையும் பூர்த்தி செய்தவுடன், ஏதேனும் பிழைகள் உள்ளதா என சரிபார்க்க அதனை மறுமுறை மதிப்பாய்வு செய்யவும்.
ஸ்டெப் 5: அடுத்து, ‘submit’ என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: நீங்கள் அந்த படிவத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் (Reference number) வழங்கப்படும். அந்த ரெஃபரன்ஸ் நம்பரைப் பயன்படுத்தி உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை சரி பார்க்க முடியும்.
தமிழ்நாடு ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை (Ration Card Status) ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி?
ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்க, நீங்கள் சில எளிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஸ்டெப் 1: முதலில் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதில் உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஸ்மார்ட் கார்டு சேவைகளின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் ‘smart card application status’ என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அது அடுத்த பக்கத்திற்கு செல்லும், அங்கு நீங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்த போது உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்பட்டிருக்கும். அந்தக் ரெஃபரன்ஸ் நம்பரை கேட்கப்படும் இடத்தில் என்டர் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: ரெஃபரன்ஸ் நம்பரை என்டர் செய்த பிறகு, ‘submit’ என்பதை கிளிக் செய்யவும். மேல்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை நீங்கள் சரியாக செய்தால், உங்களுக்கு ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலை (Ration card Status) அடுத்தத் திரையில் காண்பிக்கப்படும்.